
சென்னை,
அந்தமான் கடல், அந்தமான் நிக்கோபார் தீவு, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.
நாளை (புதன்கிழமை), நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வருகிற 15-ந்தேதி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல், வருகிற 16-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.