சிபிஎஸ்இ : 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

5 hours ago 2

புதுடெல்லி,

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 44 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வர நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது முடிவுகளை சரிபார்க்கலாம். மாணவர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) செயலி மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தங்களது டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிபிஎஸ் இ தேர்வில் 88.39 சதவீதம் மாணாக்கர்ள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 97.3 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 1.15 லட்சம் மாணாக்கர்கள் பெற்றுள்ளனர்.
  • 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 24,000 மாணாக்கர்கள் பெற்றுள்ளனர்.
Read Entire Article