தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,162 கோடியை குஜராத், உ.பி.க்கு பிரித்து கொடுத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

1 month ago 4

மதுரை, பிப்.10: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் தமிழ்நாட்டிற்கான ரூ.2,162 கோடி நிதியை குஜராத், உ.பி.க்கு பிரித்து கொடுத்ததை கண்டித்து இந்திய மாணவர் சங்க தமிழ் மாநில குழு சார்பில் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் மாலை நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்கியது. மேலும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது. இந்த நிபந்தனையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இதனால் மாநிலத்திற்கு பகிரப்பட்ட நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான அத்திட்டத்தில் இணைந்தால் மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் அந்த நிதியை குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அதிக அளவில் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தமிழ் மாநில குழு கண்டனம் தெரிவித்து மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சம்சிஅகமது தலைமை வகித்தார். இதில் மாநில செயலாளர் அரவிந்தசாமி, மத்திய குழு உறுப்பினர் கா.பிருந்தா, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் டேவிட் ராஜதுரை உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

The post தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,162 கோடியை குஜராத், உ.பி.க்கு பிரித்து கொடுத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article