தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

4 weeks ago 5

டெல்லி: தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் 17,18 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் டிச.17,18 ஆகிய 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது, தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17, 18, 19 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Read Entire Article