தமிழ்நாட்டின் பெரும் பங்களிப்புடன் ரூ.1 லட்சம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை..!!

7 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டின் பெரும் பங்களிப்புடன் 2024ல் ரூ.1 லட்சம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் 30,000 பெண் தொழிலாளர்கள் உள்பட 42,000 பேர் பணிபுரியும் ஃபாக்ஸ்கான் ஆலை மூலம் 54% ஐபோன் ஏற்றுமதி செய்யப்பட்டது. மொத்த ஐபோன் ஏற்றுமதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்கு 29% உள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் ஏற்றுமதியில் 17% பங்கை டாடா நிறுவனம் கையகப்படுத்தியுள்ள பெகட்ரான் தயாரித்து வருகிறது. 2024ல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான ஐபோன்கள் மதிப்பு 42% அதிகரித்து ரூ.1.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

The post தமிழ்நாட்டின் பெரும் பங்களிப்புடன் ரூ.1 லட்சம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்து ஆப்பிள் நிறுவனம் சாதனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article