தமிழ்நாட்டின் கடன் தொகை மற்றும் மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!!

3 hours ago 3

சென்னை: தமிழ்நாட்டின் கடன் தொகை மற்றும் மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி: திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி: கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது? அந்தக் குழு சொன்னபடி நடவடிக்கை எடுத்தீர்களா?

ஓ.பன்னீர்செல்வம்: கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைப்பிடித்தீர்களா?

அமைச்சர் எ.வ.வேலு: திமுக ஆட்சியில் அதிகமாக கடன் வாங்கவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு நாங்கள் 45% கடன் வாங்க வேண்டியுள்ளது. வாங்கிய கடனை முறையாக செலுத்துகிறார்களா என்றுதான் பார்க்க வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: மெட்ரோ ரயில் திடடத்துக்கு ஒன்றிய அரசு நிதி அளிக்கவில்லை. எங்கள் நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்து வருகிறோம்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் 2.52 லட்சம் மடிக்கணினிகள் வழங்கியுள்ளோம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: மடிக்கணினி திட்டத்தை உங்களால் தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மடிக்கணினி வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மடிக்கணினி திட்டத்தை அதிமுக அரசேதான் நிறுத்தி விட்டது. நிறுத்தப்பட்ட மடிக்கணினி திட்டத்தை சரிசெய்து வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி: கொரோனா காலம் என்பதால் மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டது.

The post தமிழ்நாட்டின் கடன் தொகை மற்றும் மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article