தமிழ்நாட்டின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி செய்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

2 weeks ago 2

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஒன்றிய அரசின் சார்பாக ஒருத்தரை அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அவர் தான் ஆளுநர். அவர் தமிழ்நாட்டின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த டங்ஸ்டன் திட்டத்தை மாநில அரசு எதிர்த்தது. சட்டப்பேரவையிலும் எந்த நேரத்திலும், எக்காலத்திலும் திமுக ஆட்சி இருக்கும் வரை மதுரையில் டங்ஸ்டன் திட்டம் நிறைவேற்றப்படமாட்டாது என்று முதல்வர் உறுதி அளித்தார். அதனையும் செய்து காட்டி மக்களுடன் இருந்து மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர். அதேபோல், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் நம்முடைய தலைவர் \ வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்று இலக்கு வைத்துள்ளார். நிச்சயம் உங்களின் எழுச்சியால் 200 அல்ல 200க்கும் மேல் தொகுதிகளை பெற்று திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

* ‘தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்; வதந்திகளை பரப்ப வேண்டாம்’
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டி பஞ்சாப்பில் நடக்கிறது. இந்த போட்டியின் போது தெரசா பல்கலை மற்றும் தர்பங்கா பல்கலைக் கழக மாணவியருக்கும் இடையே நடந்த போட்டியில் தெரசா பல்கலைக் கழக மாணவி ஒருவர் தாக்கப்பட்டார். அந்த தாக்குதல் குறித்து புகார் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உடனடியாக அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுக்கச் சொல்லியுள்ளார்.

போட்டி நடந்தபோது புள்ளிகள் தொடர்பாக சிறிய வாக்குவாதம் நடந்தது. அதனால் அ்ங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதன் தொடர்ச்சியாக நமது வீராங்கனைகளை பதிண்டாவில் இருந்து டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட பயிற்றுநர் பாண்டியராஜை பஞ்சாப் மாநில போலீசார் விடுவித்துள்ளனர். தற்போது அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். மாணவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி செய்கிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article