தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் புதிய பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்

2 weeks ago 1

சென்னை: தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன புதிய பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் 1979ம் ஆண்டு நிறுவப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி காப்புக்காட்டில் 96.34 ஹெக்டர் பரப்பளவில் மேக்னசைட் சுரங்கம் இயங்கி வருகிறது. இச்சுரங்கத்தில் திறந்தவெளி சுரங்க இயக்க முறையில் கச்சா மேக்னசைட் தோண்டி எடுக்கப்படுகிறது. டூனைட் என்ற கனிமமும் துணைதாதுவாக கிடைக்கிறது.

சுரங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா மேக்னசைட் முழுவதும் மூலப்பொருளாக கொண்டு பல்வேறு தரங்களில் முழு எரியூட்டப்பட்ட மேக்னசைட் மற்றும் மித எரியூட்டப்பட்ட மேக்னசைட் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் 41 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 169 தொழிலாளர்கள் உள்ளடக்கி மொத்தம் 210 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் பணிபுரிந்து 2016 மற்றும் 2024ல் பணியிடை இறந்த ஊழியர்களான 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பான நியமன ஆணையை கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

The post தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் புதிய பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் துரைமுருகன் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article