தமிழ்நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

18 hours ago 2

சென்னை: ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள்.

இந்நிலையில், நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையக தலைமை காஜி தாவூத் கைசர் வெளியிட்ட அறிவிப்பில், ” தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டது. எனவே 2ம் தேதி( இன்று) முதல் தமிழகத்தில் புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பமாகின்றது” என்று தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். தமிழ்நாடு முழுக்க ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படும். 30ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள்.

The post தமிழ்நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Read Entire Article