சென்னை: கிராம சாலைகளில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இன்னும் 67 பாலங்கள் கட்டப்பட வேண்டி உள்ளதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின்குமார் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் கூறியுள்ளார். பேரம்பாக்கம் அருகே கூவம் ஆற்று தரைப்பாலத்திற்கு மாற்றாக மேல்தட்டுப்பாலம் கட்டப்படுமா என உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிதிநிலைக்கு ஏற்ப இந்தாண்டே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
The post தமிழ்நாடு முழுவதும் 67 பாலங்கள் கட்ட நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் appeared first on Dinakaran.