* 4 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பியாக பதவி உயர்வு
* உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் 2 கூடுதல் டிஜிபிக்கள் உட்பட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆயுஸ் மணீஸ் திவாரி மாநில குற்ற ஆவண காப்பாக கூடுதல் டிஜிபியாகவும், மாநில குற்றப்பிரிவு ஆவண காப்பக கூடுதல் டிஜிபியாக இருந்த ஜெயராம் ஆயுப்படை கூடுதல் டிஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு காவலர் நலன் எஸ்.பியாக இருந்த பாலாஜி ஆவடி மாநகர செங்குன்றம் உதவி கமிஷனராகவும், ஆவடி மாநகரம் செங்குன்றம் துணை கமிஷனராக இருந்த பாலகிருஷ்ணன் தமிழ்நாடு காவலர் நலன் எஸ்பியாகவும், சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த பிருந்தா தமிழ்நாடு சிறப்பு காவல்பிரிவு கமாண்டன்டாகவும், சென்னை சைபர் கிரைம் எஸ்பியாக இருந்த அசோக்குமார் தமிழ்நாடு சிறப்பு காவல்பிரிவு 7வது பட்டாலியன் கமாண்டன்டாகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு கமாண்டன்டாக இருந்த அய்யாசாமி தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு 13வது பட்டாலியன் கமாண்டன்டாகவும், தமிழ்நாடு சிறப்பு பிரிவு 13வது பட்டாலியன் கமாண்டன்டாக இருந்த தீபா சத்யன் திருப்பூர் நகர தெற்கு துணை கமிஷனராகவும், சென்னை பெருநகர கோயம்பேடு துணை கமிஷனராக இருந்த சுப்புலட்சுமி சென்னை பெருநகர நிர்வாகப் பிரிவு துணை கமிஷனராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7வது பட்டாலியன் கமாண்டன்டாக இருந்த சங்கு ஆவடி மாநகர போக்குவரத்து துணை கமிஷனராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் நேரடியாக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஏஎஸ்பியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஷானாஸ் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் குற்றப்பிரிவு எஸ்பியாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஏஎஸ்பியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி உதயகுமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராகவும், ராமநாதபுரம் ஏஎஸ்பியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி சிவராமன் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராகவும், திண்டுக்கல் ஏஎஸ்பியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி சிபின் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர வடக்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் 2 கூடுதல் டிஜிபிக்கள் உட்பட 11 பேர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.