
வெப்ப அலையினை மாநிலம் சார்ந்த பேரிடராக தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்ப அலையால் ஏற்படும் சுகாதார பாதிப்பு மற்றும் உற்பத்தித் திறன் இழப்பினைக் குறைப்பதற்கான தணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாநில அளவிலான வெப்ப அலை செயல்திட்டம் மட்டுமன்றி, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் ஆகிய 11 நகரங்களுக்கெனத் தனியே வெப்ப அலை செயல்திட்டங்கள் தயாரிக்கப்படும்.
பேரிடர் அபாயத்தை திறம்பட மேலாண்மை செய்து. அதன் தாக்கத்தைக் குறைத்திட முதல் நிலை மீட்பாளர்கள். களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்திட, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் அதிநவீன வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்று 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.