சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கூடியது. பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மும்மொழி கொள்கை பிரச்னை, கல்விக்கான நிதி, 100 நாள் வேலை திட்டம் நிதி ஆகியவை ஒன்றிய அரசால் வழங்கப்படுவதில்லை. ஜி.எஸ்.டி நிதி முழுவதுமாக திருப்பி வழங்கப்படுவதில்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
மும்மொழி கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு கல்வி நிதி தர மறுக்கிறது. ஜிஎஸ்டியில் நிதிப்பகிர்வு நமக்கு 29 பைசா என்ற அளவில்தான் இருக்கிறது. இதையெல்லாம் கேட்டுப்பெற அதிமுகவிற்கு என்றைக்கும் அக்கறை இருந்தது இல்லை. புதிய எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்ப பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். பொன்முடி தான் செய்தது தவறு என கடிதம் மூலமாகவும் நேரிலும் முதலமைச்சரிடம் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழ்நாடு மக்களின் உரிமையை பெறுவதில் அதிமுகவிற்கு அக்கறை இல்லை: அமைச்சர் ரகுபதி காட்டம் appeared first on Dinakaran.