சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை இத்திட்டம் ஆய்வு செய்கிறது.அதன் அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்நூல்களை வெளியிட, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குநர் சுகந்தா தாஸ் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் ராஜாராமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர், தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் முதன்மைப் பதிப்பாசிரியர் கு. அரசேந்திரன், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இந்தியப் பிரிவின் வெளியீட்டு இயக்குநர் மல்லிகா கோஷ், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கிய தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.