தமிழ்நாடு பட்ஜெட்டில் மீனவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்னென்ன..?

5 hours ago 1

சென்னை,

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

சமூக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடலோர உள் கட்டமைப்புகளுக்கு பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் கடலரிப்பு போன்ற பாதிப்புகளை தணித்திடவும். புதிய திட்டங்களை வகுத்திடவும் உடனடி இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (NCCR) மூலம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்குநரகத்தின் ஒருங்கிணைப்புடன், கடலோர பாதுகாப்புடன் கூடிய மேம்பாட்டிற்கான ஆய்வு மேற்கொண்டு அதற்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம். தூத்துக்குடி திருநெல்வேலி. ராமநாதபுரம், கடலூர் திருவாரூர். புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர். விழுப்புரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மீன் இறங்கு தளம், மீன்பிடி வலை பின்னுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்படும்.

இலங்கை கடற்படையினரால் அதிகளவிலான தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும். இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கவும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி. இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு நிவாரணத் தொகையை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும். இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கான நிவாரணத் தொகையை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை சிறையில் வாடும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 350 ரூபாய் தின உதவித்தொகை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றங்கள், புயல் என இன்னல்கள் பல கடந்து வாழ்வைப் பணயம் வைத்து வாழ்வாதாரத்தைத் தேடும் மீனவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள நம் மாநில அரசு. மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை தொடர்ந்து உயர்த்தி வந்துள்ளது.

இந்த நிதியாண்டில் மீன் பிடிப்பு குறைவு மானியம் 1,79.147 மீனவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதமும். மீன்பிடிப்புக் குறைவு காலத்திற்கென சேமித்து வைப்பதை ஊக்குவிக்க 2,10,850 மீனவர் மற்றும் 2,03.290 மீனவ மகளிருக்குத் தலா 3,000 ரூபாய் வீதமும், மீன்பிடி தடைக் காலத்தில். 198.923 மீனவர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 1,500 ரூபாயுடன் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பாக 6,500 ரூபாயும் சேர்த்து தலா 8,000 ரூபாய் வீதமும் என. மொத்தம் 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எரி எண்ணெய் (டீசல்) மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article