சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் அரசு ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள் பின்வருமாறு..
*அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.
*விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரை நிதியுதவியாக வங்கிகள் வழங்கும்.
*விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் மகளின் உயர் கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரை வங்கிகள் வழங்கிடும்.
*அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வங்கிகள் வழங்கிடும்.
*தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது, உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.
*அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்நடைமுறை அடுத்தாண்டு ஏப்ரல் வரை செயல்படுத்தப்படும்.
The post தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்..! appeared first on Dinakaran.