சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி, ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான தகுதி விவரங்களை https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MzA= என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் இந்த பதவிகளுக்கு வருகிற 20.03.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய செயலர், நெ.183/1, ஈ.வே.ரா. பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் முகவரிக்கு கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், 6 உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.