தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் பயிற்சி

3 weeks ago 4

 

அரியலூர், டிச. 28: அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 37 கிராம ஊராட்சிகளில் உள்ள VWSC மற்றும் சுகாதார குழு பணியாளர்கள் அனைவருக்கும் நீரின் தரத்தை ஆய்வு செய்வது குறித்து பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. நீர் மூலம் பரவும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இப்பயிற்சி 12 வகையான சோதனைகள் செய்து காண்டிக்கப் பட்டது.

இந்த பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமையில் , உதவி நிர்வாகப் பொறியாளர் சுகுணராஜ் வழிகாட்டுதலிலும், இளநிலை பொறியாளர் முகேஷ்குமார், அலுவலர்கள் மற்றும் குடிநீர் பரிசோதனை கூட வேதியாளர்கள் பயிற்சி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர் கூடு தொண்டு நிறுவனம், தின்டுக்கல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து FTK பயிற்சி வகுப்பை நடத்தினார். இந்த பயிற்சியில் 37 கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article