சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 1.7.2024 நாளன்று 50 வயதுக்கு கீழுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடம் இருந்து, தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கம் பிரிவின் கீழ்க்கண்ட பதவிகளில் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, ராணுவம் அல்லது துணை ராணுவ படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து, ராணுவம், NSG, CAPF, CME/புனே போன்றவற்றில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கம் பிரிவுகளால் நடத்தப்படும் பயிற்சியில் தகுதி பெற்று, நடைமுறை அனுபவம் ஆகியவற்றுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதிய பயிற்சி அளிக்கும் திறன் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
(I) ஆய்வாளர்- BDDS (முன்னாள் சுபேதார்/சுபேதார் மேஜர்) – 7 பணியிடங்கள் – ஊதிய அளவு: 37,700-1,19,500
(II) உதவி ஆய்வாளர்-BDDS (முன்னாள் நாயிப் சுபேதார்) – 21 பணியிடங்கள் – ஊதிய அளவு: 36,900-1,16,600
(III) தலைமை காவலர்-BDDS (முன்னாள் ஹவில்தார் / நாயக்) – 36 பணியிடங்கள் – ஊதிய அளவு: 20,600-65,500
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களுடன் காவல் துறை தலைவர், செயலாக்கம், மருதம், எண்.17, போட் கிளப் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்ற முகவரிக்கு தபால் மூலம் 14.11.2024க்குள் அனுப்ப வேண்டும்.
The post தமிழ்நாடு காவல் துறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணி: முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.