தமிழ்நாடு அரசு மீது பழிபோட ஒன்றிய அமைச்சர் முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

2 weeks ago 5

சென்னை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கடந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் ரூ.18 கோடியும் ஒதுக்கி இருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும், ரயில்வே அமைச்சர் கூறுவது பொய் என்றும் விளக்கியுள்ளார். ஒன்றிய அமைச்சர் வேண்டுமென்றே தமிழக அரசின் மீது பழிபோடவே அவ்வாறு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லா விமர்சனங்களுக்கும் 5 நாட்களுக்குப் பின் இப்போதுதான் ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ரயில்வே அமைச்சகமும் ரயில்வே அமைச்சரும் மக்கள் மத்தியில் உண்மையைப் பேச இனியாவது முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு அரசு மீது பழிபோட ஒன்றிய அமைச்சர் முயற்சி: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article