தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் - அமைச்சர் சாமிநாதன் தகவல்

3 hours ago 2

சென்னை,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் இன்று சென்னை, பெரியமேடு, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சென்னை, பெரியமேடு பகுதியில் தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரி, ஆறு பிரிவுகளைக் கொண்டு ஏறத்தாழ 175 ஆண்டு காலம் நிறைவடைந்து 176-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், ஏற்கனவே இருந்த பழைய கட்டடங்களை எல்லாம் புதுப்பிக்கின்ற வகையில் முதல்-அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், இது மட்டுமல்லாமல் மூன்று புதிய கட்டடங்கள் ஏறத்தாழ சுமார் 53,300 சதுர அடி பரப்பளவில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருக்கிறது. இதன் பிறகு விரைவில் பணிகள் தொடங்கி நடைபெற இருக்கிறது. இக்கல்லூரியில் 481 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். தென்னிந்தியாவிலேயே சிறப்பான கல்லூரியாக இன்று மக்களால் பாராட்டப்பட்டு அரசு கவின் கலைக் கல்லூரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இக்கல்லூரி மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு முதல்-அமைச்சரின் ஆணைக்கினங்க இப்பணிகள் நடைபெற்று வருகின்றது. பொதுப்பணித்துறை மேற்கண்ட பணிகளை, பிரதான சின்னங்களை எல்லாம் பாதுகாக்கின்ற வகையில் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணிகள் முடிவடையும்போது அரசு கவின் கலைக் கல்லூரி புதுப்பொலிவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article