தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆர்.என்.ரவிக்கு மரியாதை உள்ளது : ஆளுநர் மாளிகை விளக்கம்

1 day ago 2

சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆர்.என்.ரவிக்கு மரியாதை உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆளுநருக்கு அன்பும் மரியாதையும் உள்ளது. ஆளுநர் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாடப்படும் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை அளிக்கிறார். ஒவ்வொரு மாநில பேரவையிலும் ஆளுநர் உரையின்போது தேசியகீதம் இசைக்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு முன்பு மற்றும் முடிந்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். தேசிய கீத மரபுப்படி இது கட்டாயமாகும். முன்பே பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

அரசமைப்பின் கடமைகளை பின்பற்ற வேண்டியது ஆளுநரின் கடமை. பல முறை முன்கூட்டியே நினைவூட்டியும் வேண்டுமென்றே, அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆர்.என்.ரவிக்கு மரியாதை உள்ளது : ஆளுநர் மாளிகை விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article