தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற வாசகம் திட்டமிட்டு நீக்கம்; இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை கண்டனம்

6 months ago 20

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற வாசகம் திட்டமிட்டு நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிலையமான தூர்தர்ஷன் தமிழ் (டிடி தமிழ்) சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று பேசினார். அப்போது” இந்தி மொழியை வைத்து கடந்த 50 ஆண்டுகளாக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சி நடப்பதாக கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியின்போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது அந்த பாடலில் ” தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரிகள் விடுபட்டது. தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற வாசகம் திட்டமிட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், தமிழ்நாட்டின் ஆளுநர் இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திட்டமிட்டே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆளுநரை திருப்திபடுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா?. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதைத் திருத்தி, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை வாசிக்காமல் விடுபட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கீதத்திலும் ‘திராவிட’ என்ற வார்த்தை வருகிறதே?. அதை தவிர்த்து விட்டு பாட முடியுமா? தேசிய கீதம் நாட்டிற்கு பெருமை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கு பெருமை தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

 

The post தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு என்ற வாசகம் திட்டமிட்டு நீக்கம்; இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article