தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா..? முதல்-அமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

2 months ago 12

சென்னை,

பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் பாடியவர்களின் குறையில் கவர்னர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள். உங்கள் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே, இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.

குறை இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையே தவிர்ப்பது நியாயமா? பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா? குறையோடு பாடுவது அநீதி... அதற்காக....பாடாமல் இருப்பது நீதியா?

இவ்வாறு அதில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்வர் அண்ணன் @mkstalin அவர்களே... அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தில் பாடியவர்களின் குறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள்... உங்கள் அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமலே குறை…

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) November 7, 2024

Read Entire Article