தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் தின கட்டுரை, பேச்சு போட்டிகள்: அரசு அறிவிப்பு

12 hours ago 4

சென்னை: தமிழ்நாடு நாள் தினத்தையொட்டி தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பிற்கிணங்க 2022ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்பெறுவதுடன் முதல் பரிசு பெறும் மாணவர் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.மாநிலப் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18ம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 4.7.2025 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கான தலைப்புகள்:கட்டுரை

1. ஆட்சிமொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம்,
2. பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி

பேச்சு

1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,
2. அன்னைத் தமிழே ஆட்சிமொழி
3. தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர்
4. அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு
5. ஆட்சிமொழி விளக்கம்
6. தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு
7. ஆட்சி மொழி – சங்க காலம் தொட்டு
8. இக்காலத்தில் ஆட்சிமொழி

விஜய் விரிக்கும் மாயவலையில் அரசியல் கட்சிகள் சிக்காது: கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு

சென்னை: ‘கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக விஜய் விரிக்கும் மாய வலையில் அரசியல் கட்சிகள் சிக்காது’ என்று திமுக மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசினார்.தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் குத்துக்கல்வலசையில் கலைஞர் பிறந்தநாள் விழா, நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசியதாவது: 2021ம் ஆண்டு தேர்தல் சீமான், விஜயகாந்த், பிரியா என பல நடிகர்களை காலி செய்த தேர்தலாகும். ஒரு நடிகரும் வெற்றி பெறவில்லை. தேமுதிக வராததால் திமுக தேய்ந்து போய்விட்டதா? தற்போது விஜய் புதிதாக வந்திருக்கிறார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பாராம்.

அவரிடம் இல்லாததை எப்படி தருவார். அவர் விரிக்கும் மாய வலையில் அரசியல் கட்சிகள் சிக்காது. சீமான் இளைஞர்களுக்கு எப்படி நேர்வழி காட்டுவார்.
சமீபத்தில் நடந்த 13 தொகுதி இடைத்தேர்தலில் பாஜ 11 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தை சுயேட்சை வென்றுள்ளார். அண்ணாவை பற்றி பேசினால் கூட்டணி கிடையாது என்று சொல்லுவதற்கு அதிமுகவுக்கு தைரியம் இல்லை. ஆங்கிலத்தில் பேசியவர்கள் வெட்கப்படுவார்கள் என்கிறார் அமித்ஷா. ஆனால் ஒன்றிய அமைச்சர்களின் குடும்பத்தினர் ஆங்கிலத்தில் தான் கல்வி பயின்றனர். தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் தின கட்டுரை, பேச்சு போட்டிகள்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article