தேவையானவை
பனீர் – 100 கிராம்
பாஸ்மதி அரிசி – கால் கிலோ
பீன்ஸ் – 7
கேரட் – 1
கேப்சிகம் – 1 சிறியது
மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் அரிசியை களைந்து சுத்தம் செய்து சாதமாக வடித்துக் கொள்ளவும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும். பின்னர், பனீரை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ், கேப்ஸிகம் ஆகியவற்றை மிகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் பனீரை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதே வாணலியில், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக அதில் கேப்சிகம், பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். பிறகு அதில் வறுத்து வைத்துள்ள பனீரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விட்டு பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிவிட்டால் பனீர் சுவையான ஃப்ரைடு ரைஸ் ரெடி!
The post பனீர் ஃப்ரைட் ரைஸ் appeared first on Dinakaran.