தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை,கட்டுரை,பேச்சு போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்

2 weeks ago 3

 

ராமநாதபுரம்,ஜன.22: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்குமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள 11,12ம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டு தோறும் மாவட்டம் வாரியாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் வளர்ச்சி துறை அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் 27ம் தேதியும், கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி 25ம் தேதியும் நடைபெறவுள்ளன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து பள்ளி, தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர், துறை தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை,கட்டுரை,பேச்சு போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம் appeared first on Dinakaran.

Read Entire Article