தமிழை தொடர்ந்து இந்தியிலும் ரீமேக்காகும் "பெருசு"

3 hours ago 1

சென்னை,

கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்சு நிறுவனத்தின் மூலம் தயாரித்த படம் 'பெருசு'. இந்த படத்தில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகை நிஹாரிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை ரூ 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் தமிழை தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. இலங்கையில ரிலீசாகி சர்வதேச அளவில் விருதையும், பாராட்டையும் பெற்ற 'டெண்டிகோ' படத்தைதான் தமிழில் பெருசு என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்கள்.

தற்போது 'டெண்டிகோ'படத்தை இந்தியில் இயக்குனர் ஹன்சல் மேத்தா ரீமேக் செய்ய உள்ளார். படத்தில் உள்ள காமெடி சீன்ஸ் தன்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால் இதை ரீமேக் பண்ணபோறதாக அவர் கூறி இருக்கிறார்.

Read Entire Article