சென்னை,
உள்ளாட்சிகளை வலுப்பெற செய்யும் விதமாக கிராம சபை கூட்டங்கள் ஜனவரி 26-ந் தேதி (குடியரசு தினம்), மார்ச்-22ந் தேதி (உலக தண்ணீர் தினம்), மே-1ந் தேதி (தொழிலாளர் தினம்), ஆகஸ்டு-15ந் தேதி (சுதந்திர தினம்), அக்டோபர்-2ந் தேதி (காந்தி பிறந்த தினம்), நவம்பர் 1-ந் தேதி (உள்ளாட்சி தினம்) ஆகிய 6 நாட்கள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் கடந்த நவம்பர் 1-ந் தேதி, தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வந்ததால் அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. எனவே அன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த கூட்டம், 23-ந் தேதி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு அந்தந்த கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இந்த கூட்டம் நடக்கிறது. நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.