தமிழகம் முழுவதும் 26 கோயில்களில் 49 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

2 weeks ago 6

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டிலான 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவிலான 33 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 217 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, 21 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தல்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் கீழ் 86.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், மலர்மாலை, பூஜை பொருட்கள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் விற்பனை நிலையம், சுதைவேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாயில், அடிப்படை வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம், ஒன்பது நிலை இராஜகோபுரத்தினையும், தேர்வீதியினையும் சுதைவேலைபாடுகளுடன் கூடிய இணைப்புபடி கட்டும் பணிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 30.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்டப் பணிகளின் கீழ் சமுதாயக் கூடங்கள், ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி, நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள், முடிகாணிக்கை மண்டபம், திருமண மண்டபம், அன்னதானக் கூடம், செயல் அலுவலர் குடியிருப்பு, திருக்குளம் சீரமைத்தல், வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள்; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 14.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைமை அலுவலக வளாகத்தில் கூடுதல் நிர்வாக கட்டிடம் கட்டும் பணி;

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் 12.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு நிலை இராஜகோபுரம், ஐந்து நிலை இராஜகோபுரங்கள் கட்டுதல் மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் மேற்கு பகுதியில் உபசன்னதிகள் அமைக்கும் பணிகள்; விழுப்புரம் மாவட்டம், சிங்கவரம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி: இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் 6.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவித்ரபுஷ்கரணி மற்றும் பொய்கை கரைப்பட்டி தெப்பக்குள படிக்கட்டுகள் அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள்;

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், அருள்மிகு பயறனீஸ்வரர் திருக்கோயிலில் 4.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; கடலூர் மாவட்டம், மருதூர், திரு அருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லம் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீண்டும் கட்டும் பணி; சென்னை, பாடி, அருள்மிகு திருவல்லீசுவரர் திருக்கோயிலில் 3.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம், அருள்மிகு லெட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் 3.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், அன்னதானக் கூடம் மற்றும் செயல் அலுவலர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகள்; கிருஷ்ணகிரி மாவட்டம், கண்ணம்பள்ளி, அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராஜகோபுரம் புதுப்பித்தல் மற்றும் முன் மண்டபம் கட்டும் பணி;

தென்காசி மாவட்டம், பண்பொழி, அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; கடலூர் மாவட்டம், திருநாரையூர், அருள்மிகு சுயம்பிரகார ஈஸ்வரர் திருக்கோயிலில் 2.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு, தேவசம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி; ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 2.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுடன் இணைக்கப்பட்ட அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயிலில் 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி;

திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பூம்பாறை, அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயிலில் 1.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், மோகனூர், அருள்மிகு காந்தமலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 1.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் மற்றும் விருந்து மண்டபம் கட்டும் பணிகள்; நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 1.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அலுவலர் குடியிருப்பு மற்றும் கண்காணிப்பாளர் குடியிருப்பு கட்டும் பணி; தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர், அருள்மிகு பால்வண்ணநாதசுவாமி திருக்கோயிலில் 1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டும் பணி மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணி; திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயிலில் 1.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடம் கட்டும் பணி; நாகப்பட்டினம் மாவட்டம், பொய்கைநல்லூர், அருள்மிகு சொர்ணபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 1.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரவை காய்கறி சந்தை கட்டடம் கட்டும் பணி; என மொத்தம் 217.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற கட்டுமானப் பணிகளை திறந்து வைத்தல்

மதுரை மாவட்டம், வேங்கடசமுத்திரம், அருள்மிகு காட்டுபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 3.70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்; சேலம் மாவட்டம், சேலம், அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயிலில் 3.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்; திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 3.14 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம்; திருவண்ணாமலை மாவட்டம், புதூர் செங்கம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 2.78 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம்; 1.98 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் 6 திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலகங்கள்; 1.80 கோடி ரூபாய் செலவில் 6 இணை ஆணையர் மண்டலங்களில் கட்டப்பட்டுள்ள 15 சரக ஆய்வர் அலுவலகங்கள்;

கோயம்புத்தூர் மாவட்டம், பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் 1.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பொருட்கள் வைக்கும் அறை மற்றும் காலணிகள் பாதுகாப்பு மையம்; சென்னை, வேளச்சேரி, அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயிலில் 1.15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடம்; திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம், அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், புரிசை, அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 1.14 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு வளாகம் மற்றும் முடிக்காணிக்கை மண்டபம்; மதுரை மாவட்டம், மதுரை, அருள்மிகு கூடலழகர் திருக்கோயிலில் 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; என மொத்தம் 21.50 கோடி ரூபாய் செலவிலான 33 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதாப், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழகம் முழுவதும் 26 கோயில்களில் 49 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 33 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article