சென்னை: தமிழகத்தில் விரைவில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும் என தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடந்த கூட்டத்தில், உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது, அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஆனால் அந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அது வெளியானதும், அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். தமிழகத்தில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழகத்தில் விரைவில் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.