சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற் கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்டதொரு தொகையை சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது.
அவ்வாறே 2024ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகையானது அரசு போக்குவரத்து கழகங்கங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
குறிப்பாக, 2024ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வழங்கப்படுகிறது, 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 200 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வழங்கப்படுகிறது. 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 151 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வழங்கப்படுகிறது. 90 நாட்கள் மற்றும் அதற்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஒன்றும் வழங்கப்படாது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.