தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

3 months ago 20

சிவகங்கை: தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் பஸ்நிலைய சீரமைப்புப் பணிகளுக்காக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்கள் சார்பில் தலா ரூ.1 கோடிக்கான காசோலையை கலெக்டர் ஆஷா அஜித்திடம் இன்று காலை வழங்கினர்.

அதன்பின் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெறும். சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்ட வசமானது.

அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை. மயக்கமடைந்து மருத்துவமனையில் இறந்துள்ளனர். அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article