தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து புகார் தெரிவிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்

1 month ago 10

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

அதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக்கொடிகள் போன்றவை தயாரிக்கப்படு வதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது.

Read Entire Article