
சென்னை,
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 6 குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் பி-யில் இடம்பெற்றுள்ளன. இந்த தொடரில் குரூப் வாரியாக இடம்பெற்றுள்ள அணிகள் விபரம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
குரூப் ஏ: ஜெர்மனி, தென் ஆப்பிரிக்க கனடா, அயர்லாந்து
குரூப் பி: இந்தியா, பாகிஸ்தான், சிலி, ஸ்விட்சர்லாந்து
குரூப் சி: அர்ஜெண்டியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா
குரூப் டி: ஸ்பெயின், பெஜ்லியம், எகிப்து, நமீபியா
குரூப் இ: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா
குரூப் எப்: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்காளதேசம்