தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரத்தை சேமித்து இரவில் வழங்க வேண்டும்: மத்திய அரசு நிறுவனத்திடம் மின்வாரியம் கோரிக்கை

4 months ago 20

சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தி மின்சாரத்தை ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ தொழில்நுட்பத்தில் சேமித்து வைத்து இரவில் வழங்குமாறு மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் தமிழக மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரியஒளி கிடைப்பதால் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்தஉற்பத்திக்கும், எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்யும்விதமாகவும் சூரியசக்தி மின்நிலையங்களை அமைத்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 8,150 மெகாவாட்திறன் உடைய சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.

Read Entire Article