கோவை: “தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் தொடரும் நிலையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி திமுகவினர் தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.” என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், 'நலம்' இலவச மருத்துவ முகாம், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்தது.