ஐதராபாத்துக்கு எதிரான வெற்றிக்கு இதுதான் காரணம் - ஹர்திக் பாண்ட்யா

1 day ago 2

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வில் ஜேக்ஸ்க்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் மும்பை கேப்டன் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் பந்து வீசியது மிகச் சிறப்பாக இருந்தது. எங்களுடைய திட்டத்தை சரியாக செயல்படுத்தியதாக உணர்கிறோம். இந்த போட்டியின் போது நாங்கள் எதிரணியின் வீரர்களை எளிதாக பேட்டிங் செய்ய விடவில்லை.

அவர்களது இயல்பான ஷாட்டுகளை விளையாடக்கூடாது என்பதற்காகவே சரியான ஏரியாவில் பந்து வீசினோம். இந்த போட்டியில் அவர்களை இவ்வளவு குறைந்த ரன்களில் சுருட்டியதற்கு எங்களது பந்துவீச்சார்களின் மிகச் சிறப்பான செயல்பாடே காரணம். இந்த மைதானத்தை பொருத்தவரை பசுமையாகவும், புற்கள் நிறைந்ததாகவும் இருந்ததால் நல்ல உதவி கிடைத்தது.

தீபக் சாஹர் முதல் ஓவரை வீசியதுமே இந்த மைதானத்தில் ஸ்லோ பந்துகளை வீசினால் சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தோம். அந்த வகையிலே முற்றிலுமாக பந்துவீச்சில் அவர்களை கட்டுப்படுத்தியே இந்த வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article