‘தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்’ - வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்த முழு விவரம்

2 weeks ago 4

சென்னை: தமிழகத்தில் தற்போது 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,07,90,791 ஆண் வாக்காளர்களும், 3,19,30,833 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8,964 பேர் உள்ளனர். மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் தொகுதி உள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (அக்.29) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக்.29) அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல்கள் https://www.elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளால், வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும்.

Read Entire Article