தமிழகத்தில் 28 மாவட்டங்களில் நடத்த வேண்டிய ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: தன்னாட்சி, அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்

2 months ago 7

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 28 ஊரக உள்ளாட்சி மாவட்டங்களில் நடத்த வேண்டிய தேர்தலை உடனே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் தன்னாட்சி அமைப்பு, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாட்டில் உள்ள 27 ஊரக, உள்ளாட்சி மாவட்டங்களில் இருந்த 91,975 ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான பொறுப்புக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த தேர்தலுக்கு பின், மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதால் தற்போது 28 மாவட்டங்களில் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடையும் சூழல் உள்ளது. அந்தவகையில் தற்போது 28 ஊரக மாவட்டங்களுக்கான தேர்தல்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. இதற்காக கடந்த 9ம் தேதி தேர்தல் ஆணையரை சந்தித்து வலியுறுத்தினோம். எனவே, தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக தமிழக அரசும் தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழகத்தில் 28 மாவட்டங்களில் நடத்த வேண்டிய ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: தன்னாட்சி, அறப்போர் இயக்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article