சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 15-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 15-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்ப அளவுகளின்படி, சமவெளி பகுதிகளில் அதிகபட்சமாக ஈரோட்டில் 34.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 15.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.