சென்னை: “தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு உள்ளது” என சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கடையநல்லூர் எம்.எல்.ஏ. செ.கிருஷ்ணமுரளி, எச்ஐவி நோய்த் தொற்றாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசும்போது, “தமிழகத்தில் 1 லட்சத்து 57,908 நபர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 1 லட்சத்து 41,341 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன.