சென்னை: தமிழகத்தில் 1 லட்சத்து 55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சென்னை அண்ணா நகரில் கூடுதலாக ஒரு ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பதிலளித்து பேசும்போது, டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாகவும் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவும் மொத்தம் 1 லட்சத்து 55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.