'தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்க உறுதியேற்போம்' - அண்ணாமலை

2 months ago 13

சென்னை,

தி.மு.க. அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்க உறுதியேற்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் பா.ஜ.க. சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத தி.மு.க. அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம், தன் பெருமையை மீட்டெடுக்க உறுதியேற்போம்."

இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, குமரி முதல் சென்னை வரை தமிழ்…

— K.Annamalai (@annamalai_k) November 1, 2024
Read Entire Article