
சென்னை,
தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில், கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் 4 சென்டிமீட்டர் மழையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி மற்றும் பெனுகொண்டபுரம், தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், தென்காசியில் சிவகிரி, தேனியில் சோத்துப்பாறை ஆகிய இடங்களில் தலா 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இதேபோன்று வேலூர், திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் ஒரு சென்டிமீட்டர் முதல் 2 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.