
சென்னை,
தமிழ்நாட்டில் நேற்று முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதே நிலைதான் அடுத்த 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று ஒரே நாளில் சென்னை உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் வேலூரில் அதிகபட்சமாக நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது. தமிழ்நாட்டில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான இடங்களின் விவரம் வருமாறு:-
சென்னை மீனம்பாக்கம்- 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்), ஈரோடு- 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்), கரூர்- 102.2 டிகிரி (39 செல்சியஸ்), சேலம்- 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்), திருப்பத்தூர்- 102.2 டிகிரி (39 செல்சியஸ்), திருச்சி- 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்), திருத்தணி- 100.4 டிகிரி (38 செல்சியஸ்), வேலூர்- 104 டிகிரி (40 செல்சியஸ்).
இனி வரும் நாட்களிலும் வேலூரில் அதிகபட்ச வெயில் பதிவாக வாய்ப்பு அதிகமாக இருக்கும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.