தமிழகத்தின் 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டம்: 14 மாவட்டங்களில் செயல்படுத்தியது வனத்துறை

4 months ago 13

சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது. வார கடைசி நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் கடந்த வாரத்தில் 400 பேர் பயணம் செய்துள்ளனர்.

வேலைப்பளு, பணிச்சூழல் சார்ந்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட, விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் சாகச பயணத்தையும் விரும்புவோர் மலையேற்றம் செய்கின்றனர். இந்நிலையில், வனத்துறை மலையேற்ற பயண திட்டத்தை 14 மாவட்டங்களில் 40 இடங்களில் செயல்படுத்தியுள்ளது.

Read Entire Article