தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு

3 months ago 20

சென்னை: தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2006-11ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். 2009ம் ஆண்டு மே 29ம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார். தமிழகத்தின் இரண்டாவது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

இதன்படி கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி அப்போதைய அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

எக்ஸ் தள பக்கத்தை அப்டேட் செய்த உதயநிதி
தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக ஆனதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் சுய விவரத்தில் துணை முதல்-அமைச்சர் என மாற்றியுள்ளார். அதில், “தி.மு.க. இளைஞரணிச் செயலாளர், துணை முதல்-அமைச்சர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.” என குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article