புதுச்சேரி: புதுச்சேரிக்கு இருக்கும் நிதி பிரச்சினை தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர் கேள்வி எழுப்பியதால், `தமிழக ஸ்டைலில் பேசட்டுமா’ என்று பாதியிலேயே மத்திய அமைச்சர் எல்.முருகன் புறப்பட்டார்.
புதுச்சேரிக்கு இன்று வந்த மத்திய இணை அமைச்சர் முருகன் புதுச்சேரியை சேர்ந்த தவில் கலைஞர் தஷ்ணாமூர்த்தி இசை பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளதால் அவரை கவுரவித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், "புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சக நேரடி பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 3,432 கோடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜிப்மருக்கு ரூ. 1450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 150 கோடி உட்கட்டமைப்பை மேம்படுத்த தரப்படும்.