தமிழக வேளாண் பட்ஜெட் 2025; 435 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

4 hours ago 3

சென்னை: 435 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில்,

*172 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

*1511 ஆழ்துளை மற்றும் குழாய் ” கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

*15,700 ஆதிதிராவிடர் பழங்குடியினர் உழவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

*4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1452 கோடி ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.

*கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி, ரூ.510 கோடியில் விவசாயிகளின் இயந்திர தேவைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

*30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

*டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

*கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

*வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர்.

The post தமிழக வேளாண் பட்ஜெட் 2025; 435 இளைஞர்களுக்கு வேளாண் தொழில் தொடங்க தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Read Entire Article